சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:35+05:30)

வேதாரண்யம் அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாணவ-மாணவிகள் பாரம்பரிய வேட்டி-சேலை அணிந்து வந்து மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் சர்க்கரை பொங்கலை அனைவருக்கும் வழங்கி செல்பி எடுத்துக் கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் சூரியகாந்தி, தமிழ் துறை தலைவர் அர்ச்சுனன், ஆங்கிலத்துறை தலைவர் இளையராஜா மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story