சமத்துவ பொங்கல் விழா


சமத்துவ பொங்கல் விழா
x

ராமேசுவரம், பாம்பன் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள நம்புநாயகி அம்மன் கோவிலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. நகர தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், ரவி, முன்னாள் நகர தலைவர் ராமநாதன், மாவட்ட பொது செயலாளர் பவர்.நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சவுந்தர், செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கோவில் வாசல் முன்பு பொங்கலிட்டனர்.

இதே போல் பாம்பன் தரவை தோப்பு பகுதியில் உள்ள அன்னை ஸ்கொலாஸ்டிகா மகளிர் கல்லூரியிலும் சமத்துவபொங்கல் விழா கொண்டாடப்பட்டது.. கல்லூரியின் முதல்வர் ஆனிப்பெர்பட்சோபி தலைமையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி துணை முதல்வர் மரியகொரற்றி உள்ளிட்ட ஏராளமான மாணவிகளும் பங்கேற்றனர். விழாவில் பாரம்பரிய விளையாட்டுகளான கும்மியாட்டம், கோலாட்டம், உறியடித்தல் உள்ளிட்ட பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


Related Tags :
Next Story