சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், சிவகங்கை கிளையின் சார்பில் 11-ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் சுந்தரமாணிக்கம் வரவேற்றார். மாவட்ட கௌரவத்தலைவர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் விழா துவக்க உரையாற்றினார்.பாரதி இசை கல்வி கழகத்தினரால் மருது சகோதரர்கள் வெளியிட்ட 'ஜம்புத்தீவு பிரகடனம்' நாட்டிய நாடகம் நடைபெற்றது.திண்டுக்கல் களம் கலைபட்டறையின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சதுரங்கதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற காரைக்குடி மாணவன் பிரானேஷ் மற்றும் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 100- மதிப்பெண் பெற்ற மாணவி துர்கா மாணவன் யுவகுரு, மாநில அளவிலான ஓட்டப்பந்தயப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கபதக்கம் வென்ற சிவகங்கை பிருத்திகா ஆகியோரை பாராட்டி விருதுகளை வழங்கி " தமிழர்களின் பண்பாட்டு மரபுகள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.நகரின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கு பெற்றனர்.முடிவில் கிளை பொருளாளர் நாகலிங்கம் நன்றி கூறினார்.