திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா
திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலந்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நேற்று காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதிய பானையில் பொங்கல் வைக்கப்பட்டு சூரிய பகவானுக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் போலீசாருக்கு நடத்தப்பட்டது. இதில் போலீஸ் சூப்பிரண்டும் கலந்து கொண்டு உறியடித்தல் போட்டியை தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story