மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உபகரணங்கள்

திருவாரூர்

நீடாமங்கலம்:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நீடாமங்கலம் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 2022-2023-ம் ஆண்டிற்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் (நிலை-1) சம்பத் தலைமை தாங்கினார். நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் (நிலை-2) முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 16 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.58 ஆயிரம் மதிப்பில் நிற்பதற்கு மற்றும் நடப்பதற்கு பயிற்சி அளிப்பதற்கான காலிப்பர், கெயிட்டர், அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளுக்கான அறிவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி பெட்டகம் போன்ற 30 உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரிய பயிற்றுனர்கள் இளையராஜா, ராதிகா, வேலுசாமி, தலைமை ஆசிரியை உமா, இயன்முறை மருத்துவர் ஆனந்தி, சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பராமரிப்பாளர் முத்துமாரிஈஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story