விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தில் உபகரணங்கள்


விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்தில் உபகரணங்கள்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

கோத்தகிரி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சர்வதேச அளவில் 2 தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட் அக்ரி திட்டத்திற்கான விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நீலகிரி மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார்.

இந்திய தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம், வளர்ச்சி அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு தேயிலை வாரியத்தின் மூலம் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்கள் குறித்து, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

விவசாய உபகரணங்கள்

உபாசி ஆராய்ச்சி நிலைய டாக்டர் சண்முகம் தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை பராமரிப்பு முறைகள் குறித்து விளக்கினார். மேலும் தேயிலையில் நிலை தன்மையை மீட்டெடுக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து ஸ்மார்ட் அக்ரி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story