மாடித்தோட்டம் அமைக்க விவசாயிகளுக்கு உபகரணங்கள்
மாடித்தோட்டம் அமைக்க விவசாயிகளுக்கு உபகரணங்கள்
திருவாரூர்
திருத்துறைப்பூண்டியில் மாடித்தோட்டம் அமைத்து தங்கள் இல்லங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளை பெற்று விற்பனை செய்யவும், வருமானத்தை பெருக்கவும் வழிவகை செய்யும் வகையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படும் என தோட்டக்கலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி ஆட்டூர் சாலையில் வசிக்கும் வீரசேகரன் என்பவருக்கு மானிய விலையில் 50 சதவீதம் மானிய விலையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விவசாயிகளுக்கு மாடித்தோட்ட உபகரணங்களை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் வழங்கினார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர் மதுமிதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் அறிவழகன், ஹரிஹரன், கார்த்திகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story