டெங்கு ஒழிப்பு


டெங்கு ஒழிப்பு
x

மதுக்கூர் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்

தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுக்கூர் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ெதாடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் சுகாதார அலுவலர்கள் ராஜேந்திரன், நெடுஞ்செழியன், துப்புரவு மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் ஆங்காங்கே தேங்கி கிடந்த பழைய டயர்கள், கழிவு பொருட்களை அகற்றி, டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது பேரூராட்சி தலைவர் கூறுகையில், பொது மக்கள் வீட்டைசுற்றி நீர் தேங்காமலும், கொசு உற்பத்தியாகாமல் தடுக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story