எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி வந்தது


எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி வந்தது
x

காசி தமிழ் சங்கமத்திற்கு சென்ற எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடிக்கு வந்தது

வேலூர்

காட்பாடி

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்றது.

பின்னர் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது.

அப்போது காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் என 21 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயிலில் இருந்து 3 பயணிகள் இறங்கி சென்றனர். பின்னர் ரெயில் எர்ணாகுளம் நோக்கி புறப்பட்டு சென்றது.

இதில் காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் ஒருவர் பாதுகாப்பு பணிக்கு உடன் சென்றார்.


Next Story