ஈரோடு இடைத்தேர்தல் பரிசுப்பொருட்கள் விநியோகம் - 2 வழக்குகள் பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் சிவக்குமார் கூறியுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப்பொருட்கள் கொடுத்தாக 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 455 புகார்களில் இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பரிசுப்பொருட்கள் தொடர்பாக நேற்று 2 இடங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து ஈரோட்டில் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story