ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க. சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க. சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க. சார்பில் 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அண்ணாமலை அறிவிப்பு.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளை முழுமையாக கவனிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

வி.சி.வேதானந்தம் (ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர்), சி.சரஸ்வதி எம்.எல்.ஏ. (முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர்), என்.பி.பழனிசாமி (தேசிய செயற்குழு உறுப்பினர்), எஸ்.ஏ.சிவசுப்ரமணியம் (கரூர் மாவட்ட பார்வையாளர்), எஸ்.எம்.செந்தில், சிவகாமி மகேஸ்வரன் (மாவட்ட பொதுச்செயலாளர்கள்), பொன்.ராஜேஷ்குமார் (மாநில செயற்குழு உறுப்பினர்), ஜி.விவேகானந்தன், விஸ்வா பாலாஜி (மாவட்ட செயலாளர்கள்), என்.விநாயகமூர்த்தி (எஸ்.சி.அணி மாநில பொதுச்செயலாளர்), தங்கராஜ், ஆற்றல் அசோக் குமார் (ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர்கள்), புனிதம் அய்யப்பன் (மகளிர் அணி மாவட்ட தலைவர்), டி.ரஞ்சித் (ஐ.டி.பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர்).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் அறிவிப்பின்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழுவில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story