ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசுமாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை
பசுமாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் பசுமாடு ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை நடைெபற்றது.
இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 400 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 600 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.
வெளிமாநில வியாபாரிகள்
இதில் பசு மாடு ஒன்றுரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் விலை போனது.
இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள். சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர