ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் இடமாற்றம்


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் இடமாற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2023 2:57 AM IST (Updated: 4 Jun 2023 6:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகில் புதிதாக 7 மாடி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே கட்டிடத்துக்கு சென்று வருவதற்கு இடையூறாக அம்மா உணவகம் இருப்பதால் அதை இடமாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அம்மா உணவகம் அகற்றப்பட்டு ஆஸ்பத்திரி வளாகத்திலேயே வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு மாற்றப்பட உள்ளது. மேலும், காந்திஜிரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து உணவு சமைத்து கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


Next Story