ஈரோடு மாநகர் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகம்


ஈரோடு மாநகர் பகுதியில்  பனங்கிழங்கு விற்பனை அமோகம்
x

ஈரோடு மாநகர் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

ஈரோடு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நமக்கு பனங்கிழக்கு கிடைக்கும். ஈரோடு மாநகரில் வ.உ.சி. மைதானத்தில் உள்ள மார்க்கெட், ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனங்கிழங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுபற்றி பனங்கிழங்கு வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒவ்வொரு சீசனிலும் நமக்கு இயற்கை ஒரு உணவை கொடுக்கும். அந்த உணவை நாம் கண்டிப்பாக சாப்பிட்டால் நோயற்ற உடல் கிடைக்கும். பனங்கிழங்கை சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. உடலுக்கு தேவையான இரும்பு, நார் சத்து கிடைக்கும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கை இடித்து அதனுடன் பால் சேர்த்து சாப்பிடலாம். மேலும் கருப்பட்டி சேர்த்தும், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்தும் பனங்கிழங்கை சாப்பிடலாம். இவ்வளவு நன்மை தரும் பனங்கிழங்கை ஒரு கட்டு 50 ரூபாய்க்குதான் விற்கிறோம். ஆனாலும் சிலர் பேரம் பேசி குறைந்த விலைக்கு கேட்கும் போது வேதனையாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story