ஈரோடு - மும்பை சிறப்பு ரெயில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு


ஈரோடு - மும்பை சிறப்பு ரெயில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 3:15 AM IST (Updated: 29 Jun 2023 4:49 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு - மும்பை சிறப்பு ரெயில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சூரமங்கலம்:

ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சேலம் வழியாக மும்பை நான்டேட்டில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டில் இருந்து மும்பை நான்டேட்டுக்கும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்டேட் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07189) நான்டேட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 12.48 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு ஈரோடு சென்றடையும். இந்த ரெயில் சேவை காலம் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஈரோடு - நான்டேட் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07190) ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நான்டேட் சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story