ஈரோடு: கால்நடைகளை தொடர்ந்து தாக்கிவந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்


ஈரோடு: கால்நடைகளை தொடர்ந்து தாக்கிவந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
x

கொங்கர்பாளையத்தில் பிடிபட்ட சிறுத்தை, வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கால்நடைகளை சிறுத்தை ஒன்று தாக்கி வந்தது.

இதனையடுத்து, கண்காணிப்பு கேமராவின் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்த வனத்துறையினர், சிறுத்தையை பிடிக்க பல்வேறு பகுதிகளில் கூண்டுகளை வைத்தனர்.

இந்நிலையில் சிறுத்தையானது, இன்று காலை வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டு ஒன்றில் சிக்கியது. இதனையடுத்து, பவானிசாகர் அடுத்த தெங்கு ரஹாடா வனப்பகுதியில், பிடிபட்ட சிறுத்தையானது பத்திரமாக விடப்பட்டது.


Next Story