சோளிங்கர் அருகே நிரம்பி வழியும் எரும்பி ஏரி


சோளிங்கர் அருகே நிரம்பி வழியும் எரும்பி ஏரி
x

சோளிங்கர் அருகே எரும்பி ஏரி நிரம்பி வழிகிறது

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கர் அருகே எரும்பி ஏரி நிரம்பி வழிகிறது

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கனமழை பெய்தது. அதன் காரணமாக சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி, குளம், நீர்நிலை பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சோளிங்கரை அடுத்து 150 ஏக்கர் பரப்பளவில் எரும்பி ஏரி உள்ளது.

தொடர் மழையாலும், அய்யன் கண்டிகை மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து காரணமாகவும் எரும்பி ஏரி 12 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நிரம்பி கடை வாசல் வழியாக தண்ணீர் பர்ந்து செல்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடைவாசல் பகுதியில் மீன்பிடிப்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Next Story