இல்லம் தேடி கல்வி மையத்தில் கட்டுரை போட்டி


இல்லம் தேடி கல்வி மையத்தில் கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே இல்லம் தேடி கல்வி மையத்தில் கட்டுரை போட்டி நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி காவல்மானியம் கிராமத்தில் இல்லம் தேடி கல்வி மையத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் பாலு தலைமை தாங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, மற்றும் பேச்சுப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் புஷ்பவள்ளிகுமார் , இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் வர்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் குமாரவேல் நன்றி கூறினார்.


Next Story