அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா


அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா
x

கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர், ஜூன்.11-

கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரி

கூத்தாநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறுவதற்கு 100 வருடங்களுக்கு முன்பு கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்பட்டது. இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான கர்ப்பிணிகள் பிரசவம் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். மேலும் காய்ச்சல், காயம் உள்ளிட்ட அவசர சிகிச்சை, குழந்தைகளுக்கான சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்கு இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 100 வருடங்களை கடந்த இந்த அரசு ஆஸ்பத்திரியில் போதிய நவீன வசதிகள் இல்லை என கூறப்படுகிறது.

டாக்டா்கள்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவதுகூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 500- க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், 500 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கு குறைந்தபட்சம் 9 டாக்டர்கள் இருக்க வேண்டும்.ஆனால், 3 டாக்டர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், கண், பல் மருத்துவர்கள் இல்லை. அறுவை சிகிச்சை செய்வதற்கு எம்.எஸ்.படித்தவர்கைள பணியமர்த்த வேண்டும். அடிப்படை வசதிகளான சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே வசதி இல்லாத நிலையில் உள்ளது.

அடிப்படை வசதிகள்

ஆஸ்பத்திரியின் உள் வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்படி, புதிய கட்டிடம் 20 படுக்கை அறைகளுடன் கட்டப்பட்டு இருந்தால், 22 கிராம மக்கள் பயனடைய வசதியாக இருக்கும். .தூய்மை பணியாளர்களும் குறைவாக உள்ளனர். இதனால், இரவு நேரங்களில் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.மேலும் நகராட்சி அந்தஸ்து, தாலுகா அந்தஸ்து அடைந்த நிலையில், கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திாியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலை நீடித்து வருகிறது. எனவே கூத்தாநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் போதிய அளவு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story