எட்டரை மாரியம்மன் கோவில் தேரோட்டம்
எட்டரை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
திருச்சி
ஜீயபுரம், ஜூன்.1-
திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த 22-ந்் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மன் தினமும் மயில், காமதேனு, காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மேலும் அக்னி சட்டி தூக்கி வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை எட்டரை காரியக்காரர் சவுந்தர்ராஜன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story