எட்டயபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழா
எட்டயபுரம் முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் கீழவாசல் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தேவி முப்பிடாரி அம்மன் கோவில் ஆடி கொடை விழா நடந்தது. கடந்த 2-ந் தேதி இரவு 9 மணிக்கு முளைப்பாரி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. 8-ந் தேதி மாலை4 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. 9-ந் தேதி காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், இரவு 10 மணிக்கு பொங்கல்பானை அழைப்பும், 11 மணியளவில் மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இரவு 12 மணியளவில் விநாயகர், முருகன், அம்மன், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜையும், தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து தெப்பத்தில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமுதாய விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story