செய்யாறில் சுற்றித்திரிந்த 45 தெரு நாய்கள் வெளியேற்றம்
செய்யாறில் சுற்றித்திரிந்த 45 தெரு நாய்கள் வெளியேற்றப்பட்டன
திருவண்ணாமலை
செய்யாறு
செய்யாறில் சுற்றித்திரிந்த 45 தெரு நாய்கள் வெளியேற்றப்பட்டன
செய்யாறு பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன அவைகளால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் எனவே நடவடிக்ைக எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் முறையிட்டனர். நகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் இந்த பிரச்சினையை எழுப்பி வந்தனர்.
அதன் அடிப்படையில் திருவத்திபுரம் நகராட்சி 12 வார்டுகள், ஆற்காடு சாலை, ஆரணி சாலை, அனுமந்தப் பேட்டை மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த 45 நாய்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து நகருக்கு வெளியே உள்ள காடுகளில் விட்டனர்.இந்த பணிகளில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் துப்புரவு அலுவலர் சீனிவாசன் மற்றும் ஆய்வாளர் மதனகோபால் ஆகியோர் மேற்பார்வையில் 8 பேர் அடங்கிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story