எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 4:08 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எல். ரெஜினி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி சுப்பாராஜ், பள்ளி தலைவர் மற்றும் செயலாளர் ஆர்.ஏ. அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகள் 151 பேருக்கு நகர சபை தலைவர் கா.கருணாநிதி, முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினர். ஆசிரியர் வளர்மதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுஜாதா நன்றி கூறினார்.


Next Story