இல்லம்தோறும் தோட்டத்தில் மரம் வளர்க்க வேண்டும்


இல்லம்தோறும் தோட்டத்தில் மரம் வளர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை சீற்றத்தை தடுக்க இல்லம்தோறும் தோட்டத்தில் அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

கடலூர்

பரங்கிப்பேட்டை:

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சதுப்பு நிலத்தில். உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவிற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ். தலைமை தாங்கினார், சப்-கலெக்டர் சுவேதாசுமன், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன், வனவர் அருள் தாஸ், தி.மு.க.ஒன்றிய செயலாளர்கள் முத்து பெருமாள், கலையரசன், டாக்டர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு சுற்றுச்சூழல் தினத்தை பற்றி விளக்கி பேசினார்.

விழாவில் வேளாண் மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிச்சாவரம் சுற்றுலா மையம் 25 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித வசதியும் இல்லாமல் இருந்தது. தற்போது அனைத்து வசதிகளும் உள்ளது. கேரளாவில் வீட்டுக்கு வீடு மரக்கன்றுகள், பல தோட்டங்கள் உள்ளன. இதனால் அங்கு எங்கு பார்த்தாலும் இயற்கை வளமாக உள்ளது. இதேபோல் நாமும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும்.

இயற்கை வனமாக மாற்ற வேண்டும்

கடலூரில் இருந்து பிச்சாவரம் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடலோர பகுதி உள்ளது. அதில் நீங்கள் அதிகளவில் மரங்களை நடலாம். நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் கூறியது போல் பனை விதைகளை அதிக அளவில் விதைக்க வேண்டும். பொதுமக்களாகிய உங்கள் தோட்டங்களில் கேரளாவை போல அதிக அளவில் பழம் சார்ந்த மரங்களை வளருங்கள்.

வெப்பத்தை தணிக்க, இயற்கை சீற்றத்தை தடுக்க இல்லம் தோறும் தோட்டத்தில் அதிக அளவில் மரம் வளர்க்க வேண்டும்.

மேலும் இந்த கடலூர் மாவட்டத்தை இயற்கை வனமாகவும், வளமாகவும் மாற்றுவதற்கு மக்களாகிய நீங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழிசங்கர், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கம், ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் செல்வராஜ், ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் கடலூர் மாவட்ட வனத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சிதம்பரம் வன சரக அலுவலர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.


Next Story