மாதந்தோறும் வணிகர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு


மாதந்தோறும் வணிகர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

மாதந்தோறும் வணிகர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு வணிகர்களின் சங்கத்தின் மாநில தொழிலாளர் பிரிவு தலைவர் பிரகாஷ் தலைமையில், பெரம்பலூர் தொகுதி தலைவர் முருகராஜ் ஒருங்கிணைப்பில், அச்சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையாவிடம் மனு அளித்தனர். அதில், பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமப்புற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க பெறும் நலத்திட்டங்கள், தொழில் மேம்பாட்டு நலத்திட்டங்கள் எளிதில் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வணிகர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடத்திட வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story