60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசே காப்பீடு செய்ய வேண்டும்


60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசே காப்பீடு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 27 April 2023 12:15 AM IST (Updated: 27 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசே காப்பீடு செய்ய வேண்டும் மூத்த குடிமக்கள் அவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மயிலாடுதுறை


மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அதன் துணைத் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, சாமி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் திருவள்ளுவன் வரவேற்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மூத்த குடிமக்களுக்காக தனி துறையை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்வது, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசே காப்பீடு செய்ய வேண்டும், தகுதியுள்ள முதியோர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செல்வகுமார் நன்றி கூறினார்.


Next Story