ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்
ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்
கூடலூர்
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை சார்பில் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் உலக ரத்த தான தின விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இத்றகு தொழிற்பயிற்சி மைய முதல்வர் ஷாஜி தலைமை தாங்கினார். பயிற்றுனர் ஜான் வரவேற்றார். ரத்த வங்கி(பொறுப்பு) செவிலியர் ஷீலா பேசும்போது, 18 வயதிற்கு மேற்பட்டோர் ரத்த தானம் செய்ய முடியும். அவர்களது உடல் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் எடுக்கப்படும். எடுக்கப்பட்ட ரத்தத்தை ஈடு செய்ய புதிய ரத்தத்தை உடல் உற்பத்தி செய்து கொள்ளும். எனவே ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
தொடர்ந்து நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், எய்ட்ஸ் கட்டுப்பட்டு மைய ஆலோசகர் தமிழ்செல்வி ஆகியோர் பேசினர். பின்னர் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளிடப்பட்டு மாணவர்களுக்கு வினியோகிக்க பட்டது. இதில் கூடலூர் ரத்த வங்கி ஆய்வக நுட்புனர் வனிதா, சரண்யா தொழிற்பயிற்சி மைய மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில்தொழிற்பயிற்சி மைய பயிற்றுனர் செல்வகுமார் நன்றி கூறினார்.