உடல் ஆரோக்கியத்தை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் தகவல்


உடல் ஆரோக்கியத்தை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் தகவல்
x

உடல் ஆரோக்கியத்தை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

கரூர்

வினாடி-வினா புத்தகம் வழங்கல்

கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி.- பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு வினா-விடை புத்தகம், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உதிரம் உயர்த்துவோம் என்ற ஊட்டச்சத்து பெட்டகம்.

பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில புலமை மேம்படுத்தும் விதமாக ஆங்கிலம் நண்பன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு வினா-விடை புத்தகம், ஊட்டச்சத்து பெட்டகம், சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுமைப்பெண் திட்டம்

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளிகளில் படித்தவர்கள் உயர்கல்விக்கு செல்ல உள்ள திட்டம் தான் புதுமைப்பெண் திட்டமாகும். நிச்சயமாக நாளைய தலைமுறை நம்முடைய தரத்தை நம்மால் உயர்த்திக்கொள்ள முடியும் என்பதை மனதில் நாம் கொள்ள வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிக்கும் 16,908 மாணவ-மாணவிகளுக்கு வினா-விடை புத்தகத்தை வழங்கும் நிகழ்வு நம்முடைய பள்ளிகளில் இருந்து தொடங்குகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாட்டில் உதிரம் உயர்த்துவோம் என்ற ஒரு மகத்தான பணியினை முன்னெடுத்து இருக்குகிறார்கள்.

நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது. அதனால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது, அதனை நாம் அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும். இதனால் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தின் கீழ் 17 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ரத்தப்பரிசோதனை செய்யப்படுகின்றன. 3-வது ஆங்கில நண்பன் திட்டம் ஆகும்.

கரூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லூரி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 1½ ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் ரூ.3,500 கோடியில் அரசின் திட்டங்கள், கல்லூரி பணிகளுக்கான நிதிகளையும் முதல்-அமைச்சர் தந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள். மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்

பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி

முன்னதாக கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று காலை மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மொழிப்போர் தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, 150 பேருக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


Related Tags :
Next Story