முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்


முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 மனுக்கள் பெறப்பட்டன.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 30 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.

கல்வி உதவித்தொகை

பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 7 பேருக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தொடர்ந்து முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வருவாய்த்துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தஞ்சை வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையையும், ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பெண்ணுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.கூட்டத்தில் முப்படைவீரர் வாரிய உப தலைவர் பாலகிருஷ்ணன், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலக நல அமைப்பாளர் இளங்கோவன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story