முன்னாள் ராணுவ வீரர் கைது
சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சாத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டியுடன் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில் பாட்டி வழக்கம்போல் சாத்தூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதால் அந்த சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முன்னாள் ராணுவவீரர் ஆசைப்பாண்டியன் (வயது 68) என்பவர் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் ராணுவவீரர் கைது
இதையடுத்து பாட்டி வேலை முடிந்து வந்ததும் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து அம்மாபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து முன்னாள் ராணுவவீரர் ஆசைப்பாண்டியனை கைது செய்தனர்.