முன்னாள் ராணுவத்தினர் உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சியில் முன்னாள் ராணுவத்தினர் உண்ணாவிரதம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர் யாமின் தலைமை தாங்கினார். கோவிந்தன் முன்னிலை வகித்தார். துரைராஜ் வரவேற்றார். ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு முதல்-அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுக்களை 15 நாட்களில் தள்ளுபடி செய்து விடுகின்றனர். எனவே முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் அய்யசாமி, கலியசெல்லமுத்து, குருசாமி உள்ளிட்ட முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story