மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். அம்மனை தரிசிக்க வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் மதுரைக்கு வந்து செல்கின்றனர். பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றனர். மக்களின் வருகை அதிகமாக இருப்பதால், கோவில் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் நாள்தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான உப கோவில்களில் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வுசெய்ய கோவில் நிர்வாகம் ஒப்பந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிபந்தனை

அந்த ஒப்பந்த அறிவிப்பில், பாதுகாப்பு பிரிவில் பணியாற்ற 67 முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மின் உதவியாளர், ஓட்டுனர், பிளம்பர் என சுமார் 79 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யவுள்ளதாகவும், இந்திய ராணுவத்தில் சுபேதார் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற 30 வயது முதல் 50 வயது உடைய முன்னாள் ராணுவ வீரர்கள் தகுதி உடையவர் எனவும், 84 வகையான நிபந்தனைகளை விதித்து கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் www.tenders.tn.gov.in, www.tnhrce.gov.in இணையதள முகவரியிலும், வருகிற 14-ந்தேதி வரை கோவில் அலுவலகத்திலும் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று கொண்டு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story