முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்


முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
x

காட்பாடியில் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர்

காட்பாடி

முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் அனைத்து சங்கங்கள் ஒருங்கிணைந்து காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

சங்க தலைவர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். பாஸ்கரன், ராஜேந்திரன், ஜெகதீசன், கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் சிவக்குமார் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

தமிழக முதல்-அமைச்சர், கவர்னர், கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரிய அளவில் அற போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

முன்னாள் ராணுவ வீரர்கள் மருத்துவமனை மற்றும் கேண்டீனுக்கு செல்வதற்கு சாலையை அமைக்க வேண்டும்.

கேந்திர வித்யாலயா பள்ளியை வேலூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்திற்கு ஜவான் பவன் அமைத்து தர வேண்டும்.

வீட்டு வரி விலக்கு, சுங்கவரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் ஒருங்கிணைப்பாளர்கள் ஜம்புலிங்கம், வடிவேலன், குமார், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஏழுமலை நன்றி கூறினார்.


Next Story