அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
x
திருப்பூர்


வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1992 -ம் ஆண்டு முதல் 1994-ம் கல்வி ஆண்டில் 11, 12-ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சந்திப்பு நேற்று நடந்தது. பல்வேறு நிறுவனங்களில் வேைல பார்ப்பவர்கள், உயர் அரசு பதவிகளில் இருப்பவர்கள் என பல்வேறு நிலைகளில் அவர்கள் இருந்தாலும் இந்த சந்திப்பு அவர்களை மகிழ்ச்சியின் எல்லைக்கு அழைத்து சென்றது. அப்போது அவர்கள் முகத்தில் மலர்ந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தித்திக்கும் சந்திப்பு அல்லவா. பின்னர் ஒருவரையொருவர் அன்று நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பகிர்ந்து ெகாண்டனர்.


Next Story