முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம்


முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம்
x

முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்க கூட்டம் உடையார்பாளையத்தில் நடந்தது. ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருமானூர் ஒன்றிய தலைவர் கேப்டன் மூர்த்தி, அரியலூர் ஒன்றிய தலைவர் ரெங்கராஜ், திருமானூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவரும் புதிய உறுப்பினராக சேர்த்தல், அரியலூரில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் பெறக்கூடிய பலன்கள் பற்றி அறிந்து கொள்ளுதல், ஸ்பர்ஸ் பென்சன் பற்றிய விளக்கம் தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் முப்படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோ் கலந்து கொண்டனர். முன்னதாக குருநாதன் வரவேற்றார். முடிவில் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story