இந்திய குடியுரிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு பயிற்சி


இந்திய குடியுரிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு பயிற்சி
x

இந்திய குடியுரிமை பணிக்கான போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிவகங்கை

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப்பணிகளுக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.

பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம். அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை மற்றும் துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குனர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் இலவசமாக பெற்று கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story