ரேஷன்கடை விற்பனையாளர் பணிக்காக தேர்வு
ரேஷன்கடை விற்பனையாளர் பணிக்காக தேர்வு நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 114 விற்பனையாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 14-ந் தேதி முதல் 27-ந்தேதி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறமுள்ள சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த நேர்முகத்தேர்வுக்கான அனுமதி சீட்டினை ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் http://www.drbramnad.net/hallticket.php என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவினரை 04567-230950 என்ற தொலைபேசி எண்ணிலோ, drbpdsramnad@gmail.com என்ற மின்அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்தார்.