கிராம உதவியாளர் எழுத்துத்தேர்வை 3 ஆயிரத்து 596 பேர் எழுதினார்கள்


கிராம உதவியாளர் எழுத்துத்தேர்வை  3 ஆயிரத்து 596 பேர் எழுதினார்கள்
x

கிராம உதவியாளர் எழுத்துத்தேர்வை நேற்று 3 ஆயிரத்து 596 பேர் எழுதினார்கள். 1,039 பேர் தேர்வு எழுதவரவில்லை.

திருப்பூர்

கிராம உதவியாளர் எழுத்துத்தேர்வை நேற்று 3 ஆயிரத்து 596 பேர் எழுதினார்கள். 1,039 பேர் தேர்வு எழுதவரவில்லை.

கிராம உதவியாளர் தேர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் காலியாக உள்ள 50 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக மொத்தம் 4 ஆயிரத்து 635 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வுக்காக திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு அவினாசிபாளையம் ஏ.ஜி.கலை அறிவியல் கல்லூரி, அவினாசி அரசு கலைக்கல்லூரி, அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பல்லடம் புரட்சி தலைவி அம்மா அரசு கல்லூரி, விஜயமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் பொன்னு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் என்.சி.பி.முனிசிபல் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி, காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடுமலை அரசு கலைக்கல்லூரி, மடத்துக்குளம் கே.டி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளி என 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

1,039 பேர் தேர்வு எழுதவரவில்லை

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற்றது. தேர்வுக்கு வந்தவர்களுக்கு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்ய மையங்களில் வசதி செய்யப்பட்டு இருந்தது. காலை 9.50 மணி வரை தேர்வு அறைக்கு செல்ல அனுமதித்தனர். அதன்பிறகு வந்தவர்களை தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் சோகமாக வெளியே சென்றார்கள்.

அவினாசியில் உள்ள தேர்வு மையத்துக்கு சென்று கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். தெற்கு அவினாசிபாளையத்தில் உள்ள தேர்வு மையத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். நேற்று 3 ஆயிரத்து 596 பேர் தேர்வு எழுதினார்கள்.

விண்ணப்பித்தவர்களில் ஆயிரத்து 39 பேர் தேர்வு எழுத வரவில்லை.


Related Tags :
Next Story