ரேஷன்கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு
ரேஷன்கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப் பாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 114 விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் மாதம் 14-ந்தேதி வரை பெறப்பட்டது. தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வருகிற 14-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட பதிவு புத்தகம், அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட சான்றிதழ், தனித்துவமான அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உரிமை கோரலுக்கான ஆதாரமாக உள்ள ஆவணத்துடன் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story