மாவட்டத்தில் 82 மையங்களில் நடந்தது: பிளஸ்-1 தேர்வை 19,479 மாணவ-மாணவிகள் எழுதினர்-2,801 பேர் தேர்வு எழுதவில்லை


மாவட்டத்தில் 82 மையங்களில் நடந்தது: பிளஸ்-1 தேர்வை 19,479 மாணவ-மாணவிகள் எழுதினர்-2,801 பேர் தேர்வு எழுதவில்லை
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 82 மையங்களில் நடந்த பிளஸ்-1 பொதுத்தேர்வை 19,479 மாணவ-மாணவிகள் எழுதினர். 2,801 பேர் தேர்வு எழுத வரவில்ல.

பிளஸ்-1 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, 3 உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள், ஒரு சமூக நலத்துறை மேல்நிலைப்பள்ளி, 5 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 63 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 179 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 780 பேர் பிளஸ்-1 பொதுத்தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தமிழ் தாளை 19 ஆயிரத்து 479 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். 2 ஆயிரத்து 801 பேர் தேர்வு எழுத வரவில்லை. பொதுத்தேர்வு பணியில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 82 பேர் கொண்ட பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் ராஜகோபால் ஆகியோர் தர்மபுரி, அதியமான்கோட்டை, இலக்கியம்பட்டி, நல்லம்பள்ளி, தொப்பூர் உள்ளிட்ட அரசு பள்ளி தேர்வு மையங்களில் பொதுத்தேர்வை நேரில் ஆய்வு செய்தனர்.

தேர்வையொட்டி ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு போலீஸ், ஒரு ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு முடிந்த பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விடைத்தாள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story