உதவித்தொகை வழங்க தேர்வு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க தேர்வு முகாம் நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது
திருநெல்வேலி
தமிழக அரசின் உத்தரவின்பேரில், நெல்லை மாவட்டத்தில் சமூக நலத்துறை அரசாணைப்படி 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்க மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு சார்பில் மாதாந்திர உதவித்தொகை பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் முகாம் நடந்தது.
இந்த முகாமில் 42 மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 40 பேர் தகுதியானவர்கள் என தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமாரதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story