சிதம்பரத்தில் என்சிசி மாணவர்களுக்கு தேர்வு
சிதம்பரத்தில் என்சிசி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
சிதம்பரம்,
தமிழ்நாடு 4-வது ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கம்பெனி என்.சி.சி. சார்பில் பள்ளி அளவிலான என்.சி.சி. மாணவர்களுக்கு ஏ சான்றிதழ் தேர்வு சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது.
இதில் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 180 என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு எழுத்து தேர்வை எழுதினர்.
இந்த தேர்வை கமாண்டர் கர்ணல் வாசுதேவன் நாராயணன் பார்வையிட்டார். அப்போது முதல்நிலை என்.சி.சி. அதிகாரி ராஜசேகர், இரண்டாம் நிலை அதிகாரி எத்திராஜன், மூன்றாம் நிலை அதிகாரிகள் திருவரசமூர்த்தி, கார்த்தி, என்.சி.சி. அலுவலர்கள் நாயிக் சுபேதார் அல்டோ, ரவிந்தர்குமார், அவில்தார் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பள்ளியில் 2 ஆண்டு என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ராவண பாடத்திட்டத்தின் படி 500 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.