பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி


பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில்  மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி
x

பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் 10,263 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதியதில் 9,114 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.8 ஆகும். அதேபோல் 10,709 மாணவிகள் தேர்வு எழுதியதில் 10,197 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.22 ஆகும். இதன் மூலம் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 6.42 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 10-ம் வகுப்பு தேர்வை 12,494 மாணவர்கள் எழுதியதில் 11,062 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.54 ஆகும். அதுபோல் 12,240 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11,692 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 95.52 ஆகும். இதன் மூலம் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் 6.98 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Next Story