சீர்காழியில் தோண்ட,தோண்ட.... ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையசிலைகள், செப்பேடுகள்...!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக மேற்கு வாசல் கோபுரம் அருகே ஏக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.
அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100-க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.