ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கால்வாய் தூர்வாரும் பணி
வாணியம்பாடி நியூடனில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.
வாணியம்பாடி நியூடவுன் நாடார்காலனி பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் நீர்நிலை வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 85 வீடுகளை வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் இணைந்து முழுமையாக அகற்றினர்.
இந்த நிலையில், விவசாயிகள் குறைத்தீர்வு முகாம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நாடார் காலனி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு, கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தினால் அந்த வழியாக வெளியேறுகிற கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், இதே நிலை தொடரும் பட்சத்தில் மழைக்காலங்களில் வெள்ளநீர் வெளியேறாமல் குடியிருப்புக்குள் புகுந்து விடும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் பேரில் நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறையினர் நேற்று நாடார் காலனி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடத்தில் கால்வாயை தூர்வாரி கால்வாய் வழியாகசெல்ல தண்ணீர் செல்ல வழிவழிவகை செய்தனர்.