தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது


தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது
x

தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது என லியோனி கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகர தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் பாவடிதோப்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி வனராஜா, மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ் ப்ரியா காளிராஜன், பொன் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு பேச்சாளராக திண்டுக்கல் ஐ. லியோனி கலந்து கொண்டு பேசியதாவது:- திராவிட விளக்கை அணையாமல் கருணாநிதியும், அன்பழகனும் பாதுகாத்தார்கள். தமிழ் மொழியை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் காளிராஜன், சபையர் ஞானசேகரன், மண்டல தலைவர்கள் குருசாமி, சேவுகன், வர்த்தக அணி இன்பம், மாவட்ட துணை செயலாளர் தினேஷ்மாறன், பலராமன், கந்தசாமி, வெயில்ராஜ், அதிவீரம்பட்டி செல்வம், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ், திலிபன் மஞ்சுநாத், திருத்தங்கல் மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story