நகராட்சி சுகாதார வளாகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்


நகராட்சி சுகாதார வளாகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
x

நகராட்சி சுகாதார வளாகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

திருப்பூர்

தளி

உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள சுகாதார வளாகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

சுகாதார வளாகம்

உடுமலைக்கு வருகை தருகின்ற சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நகராட்சி சார்பில் மத்திய பஸ் நிலையத்தை சுற்றிலும் கட்டண சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் மூலமாக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். சுகாதார வளாகத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக செல்கின்ற பொது மக்களிடம் கட்டணம் இரண்டு மடங்காக வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

உடுமலை மத்திய பஸ் நிலையத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதை சாதகமாக கொண்ட ஒப்பந்ததாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடவும் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். அது மட்டுமின்றி சுகாதார வளாகங்களை முறையாக பராமரிப்பு செய்யாததால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சுகாதார வளாகத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது இல்லை. இதனால் அதில் இருந்து எழும் துர்நாற்றம் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொது மக்களுக்கு உடல் பாதைகளை ஏற்படுத்தி வருகிறது.

நடவடிக்கை

இதற்கிடையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வேதனையை அளிக்கிறது.இது குறித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே உடுமலை பஸ் நிலையத்தை சுற்றிலும் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டண சுகாதார வளாகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது மட்டுமின்றி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச சுகாதார வளாகத்தை குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மைப்படுத்துவதற்கும் முன் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

---------

1½ காலம் செய்திக்குள் படம்

நகராட்சி சுகாதார வளாகத்தை படத்தில் காணலாம்


Next Story