வானில் தோன்றிய வட்டத்தால் பரபரப்பு


வானில் தோன்றிய வட்டத்தால் பரபரப்பு
x

வேலூரில் வானில் தோன்றிய வட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூரில் நேற்று இரவு வானில் மேகக் கூட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய வட்டம் ஒன்று தென்பட்டது. இது தொடர்பாக வானில் அதிசயம் ஏதோ நிகழ்ந்துள்ளதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

இதனால் பொதுமக்கள் பலர் தங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு சென்று அந்த வட்டத்தை பார்வையிட்டனர். பலர் செல்போனில் படம் எடுத்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்தனர். சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இந்த திடீர் வட்டத்தால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story