ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

கொடைரோடு அருகே ஓடும் லாரியில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

மதுரையில் இருந்து பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த லாரியை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஜிந்தா (வயது 25) என்பவர் ஓட்டினார். கொடைரோடு அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் நக்கம்பட்டி மேம்பாலத்தில் வந்தபோது, அந்த லாரியின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக லாரியில் தீப்பற்றியது. உடனே சுதாரித்துகொண்ட டிரைவர், லாரியை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது லாரியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் நக்கம்பட்டி நான்கு வழிச்சாலை புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் லாரியின் பின்பக்க 3 டயர்கள் எரிந்து நாசமானது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் ஓடும் லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story