ஏரியில் மரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


ஏரியில் மரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x

மங்கலம்பேட்டை அருகே ஏரியில் மரங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே பள்ளிப்பட்டு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. இது குறித்த தகவலின் பேரில் மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் எரிந்து சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story